கூலிம் மாவட்டத்திலுள்ள அனைத்து பிள்ளைகளும் கட்டாயமாக தங்களின் பள்ளி பருவத்தை முடித்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு போதும் தங்களின் தொடக்கக் கல்வியை புறணித்து விடக்கூடாது என்று கூலிம் மாவட்ட அதிகாரியும், நகராண்மைக்கழகத் தவைருமான டாக்டர் ஹாஜி நட்ஜ்மான் முஸ்தபா கேட்டுக்கொண்டார்.
கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய நாட்ஸ்மேன் முஸ்தபா , தாம் தலைமையேற்றுள்ள கூலிம் நகராண்மைக்கழகத்திற்கு உட்பட பகுதிகளில் எந்தப் பிள்ளையும், எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்காமல் இருந்து விடக்கூடாது. பிள்ளைகளின் கல்வியைத் தொடர முடியாத பெற்றோர்கள் கிராமத் தலைவர்களை சந்தித்து விவரங்களை கூறலாம் என்று ஆலோசனைக் கூறினார்.
தங்கள் பகுதிகளில் உள்ள பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை கிராமத் தலைவர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
கூலிம் மாவட்டம் 2035 ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக தோற்றம் காண்பதற்கான முன்னெடுப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கூலிமின் பிரதான தொழில்நுட்ப பூங்காவான குலிம் ஹைடெக் பார்க் கில் இருக்கக்கூடிய தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை கூலிம் மாவட்டத்தில் மக்கள் பெறுதற்கு, அவர்கள் தங்களை தகுதியுடையவர்களாக உயர்த்திக்கொள்வதற்கு போதுமான கல்வியை பெற்றிருப்பது அவசியமாகும் என்று நாட்ஸ்மேன் முஸ்தபா வலியுறுத்தினார்.
தொழில் நுட்ப முதலீட்டுகள் குவியும் ஹைடெக் பார்க் 60% விழுக்காட்டினர் அந்நிய நாட்டினர்கள்தான் வேலை செய்கின்றனர் . கூலிம் மாவட்ட மக்கள் எங்கே போனார்கள் ? என்ற கேள்வி எழுப்பிய நாட்ஸ்மேன் முஸ்தபா, மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என இனப் பாராமல் அனைவரும் கூலிம் மாவட்டத்தில் ஹைடெக் பார்க் கில் உள்ள வேலை வாய்ப்பை பெறுவதற்கு தங்களை கல்வி ரீதியாக உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தனார்.








