Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பள்ளி வெளிப்புற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

பள்ளி வெளிப்புற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Share:

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு மே 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப நிலையை கருத்தில் கொண்டு இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அடுத்த உத்தவு பிறப்பிக்கப்படும் வரையில் இந்த தடை நடப்பில் இருக்கும் என்று அமைச்சர் விளக்கினார். இது தொடர்பான சுற்றறிக்கைகள் நாடு முழுவதும் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்ப்பட்டுள்ளதாக ஃபட்லீனா சீடெக் தெரிவித்தார்.

Related News