Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

Share:

சரவாக் மாநிலத்தில் சலுகை விலை டீசலை முறைகேடு செய்ய முயன்ற சம்பவத்தை உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சைச் சேர்ந்த மாநில அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

பிந்தாவா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த முறைகேடு சம்பவமானது கண்டறியப்பட்டுள்ளது.

“Ops Tiris 4.0” நடவடிக்கையின் ஒரு பகுதியாக போலீசாருடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக சரவாக் மாநில அமலாக்கத்துறை இயக்குநர் மேத்யூ டொமினிக் பாரின் தெரிவித்துள்ளார்.

அமலாக்க அதிகாரிகள் சேகரித்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சோதனையில், சுமார் 10 ஆயிரம் லிட்டர் டீசல், அதாவது மலேசிய மதிப்பில் 72 ஆயிரத்து 700 ரிங்கிட் முறைகேடாக மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது, 1961-ஆம் ஆண்டின் AKB சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவுள்ளது.

Related News