Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு தைப்பூச தங்க ரத விவகாரம் : டத்தோ ராமசந்திரன் எஸ்.பி.ஆர்.எம். ஜாமீனில் விடுவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு தைப்பூச தங்க ரத விவகாரம் : டத்தோ ராமசந்திரன் எஸ்.பி.ஆர்.எம். ஜாமீனில் விடுவிப்பு

பினாங்கு, டிச.6-


பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்குச் சொந்தமான 8 லட்சம் வெள்ளி செலவிலான தங்க ரதம் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள அந்த அறவாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டத்தோ எம். இராமச்சந்திரன், இன்று காலை 11 மணியளவில் எஸ்.பி.ஆர்.எம். ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்

டத்தோ ராமச்சந்திரனை தடுத்து வைப்பதற்கு SPRM பெற்ற 6 நாள் தடுப்புக்காவல் காலக்கெடு, குறைக்கப்பட வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் குழுவினர் முன்னெடுத்துள்ள சட்டப்போராட்டம், வரும் திங்கட்கிழமை பினாங்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோவின் சிறப்பு அதிகாரியான ராமச்சந்திரன், இன்று காலையில் விடுவிக்கப்பட்ட வேளையில், எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அனுதினமும் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது..

தடுப்புக்காவலில் ஓரிரவை கழித்து விட்ட ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் பேசுகையில், சோதனைகள் மத்தியில் தாம் மன உறுதியுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

வரவிருப்பதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், இது தம்முடைய போராட்டத்திற்கு மற்றொரு குறுக்கீடாகும்.. அதேவேளையில் பினாங்கு அறப்பணி வாரியத்தை காப்பாற்ற தாம் உறுதி பூண்டுள்ளதாக ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →