புத்ராஜெயா, டிசம்பர்.01-
பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் மற்றும் வர்த்தகர் ஆல்பெர்ட் தேவுடன் இணைந்து கைது செய்யப்பட்ட பெண்மணி சோஃபியா ரினி புயோங்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று ஜாமீனில் விடுவித்துள்ளது.
அந்த பெண்மணயிடம் விசாரணை நடத்துவதற்கு எஸ்பிஆர்எம் பெற்றிருந்த 4 நாள் தடுப்புக் காவல் அனுமதி இன்று நிறைவுப் பெற்றதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாரர்.
சபா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணத்தைப் பெறுவதற்கு ஷாம்சுலுக்கு 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகக் கொடுத்ததாக வர்ததகர் ஆல்பெர்ட் தே கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஷாம்சுலின் பினாமி என்று கூறப்படும் சோஃபியா ரினியும் கைது செய்யப்பட்டார்.








