Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்
தற்போதைய செய்திகள்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.22-

சபா, பூலாவ் காயாவில் உள்ள லோக் உராய் (Lok Urai), கம்போங் செலாமாட் எனும் மிதவை கிராமத்தில் உள்ள பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு உறவினர்களைச் சந்திக்க வந்திருந்த பலர், இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக கடலுக்குள் விழுந்தனர்.

நேற்று பண்டிகையின் முதல் நாளில் நடந்த இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தஞ்சோங் ஆரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு மாத நோன்பிற்குப் பிறகு புதிய ஆடைகள் அணிந்து மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாட வந்தவர்களுக்கு இத்தகைய கசப்பான அனுபவம் ஏற்பட்டது வருத்தமளிக்கிறது என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் இருக்கும் பழைய பாலங்களை முறையாகப் பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related News