மலேசியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஹாஷிம் அப்துல்லா, இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் காலமானார். 71 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தேசிய இருதய சிகிச்சை கழகத்தில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து புத்ராஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை மேல் சிகிச்சைக்காக IJN மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
2016 முதல் 2018 வரை தேர்தல் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிய இவர், விவசாய அமைச்சின் தலைமைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவரது மறைவுக்குத் தேர்தல் ஆணையம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. அன்னாரது உடல் இன்று இரவு புத்ராஜெயா, பிரசிண்ட் 20-இல் உள்ள இஸ்லாமிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.








