ஒரு விவசாய நாடான மலேசியாவில் தேசிய காரான புரோட்டோனை அறிமுகப்படுத்தி, நாட்டின் சொந்த கார் தாயரிப்பு தொழிற்சாலைக்கு வழிகோலிட்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
கோலாலம்பூர் MATIC மையத்தில் இன்று நடைபெற்ற தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான Perusahaan Otomobil Nasional Berhad நிறுவனத்தின் 40 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டார். துன் மகாதீன் பெயரை பிரதமர் உச்சரித்த போது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. புரோட்டோன் நிறுவனத்தின் இந்த 40 ஆம் ஆண்டு நிறைவுவிழாவையொட்டி அந்த தேசிய கார் நிறுவனத்தின் புதியத் தயாரிப்பான Proton X90 ரக காரை பிரதமர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


