Dec 6, 2025
Thisaigal NewsYouTube
விரிவுரையாளர் சொலேஹா யாக்கோப்பின் வரலாற்றுக் கட்டுரைகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

விரிவுரையாளர் சொலேஹா யாக்கோப்பின் வரலாற்றுக் கட்டுரைகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.11-

மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர் சொலேஹா யாக்கோப்பின் வரலாற்றுக் கட்டுரைகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரோமானியர்களுக்குக் கப்பல் கட்டுமானத்தைக் கற்றுக் கொடுத்தவர்களே மலாய்க்கார்கள் என்றும், சீனர்களுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுத்தவர்கள் மலாய்க்காரர்கள் என்றும் சொலேஹா யாக்கோப் வாதித்த வரலாற்று அம்சங்கள், அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரின் படைப்புகள் மறுமதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாரிஃபா முனிரா அலாதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொருவரின் ஆய்விலும் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை இருக்க வேண்டுமே தவிர கற்பனையில் வலம் வரக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News