பாலிக் பூலாவ், அக்டோபர்.24-
ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பேரிடர் தொடர்பான காணொளிகளைப் பகிர்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பேரிடர் காலங்களில் ஏஐ நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் பகிரப்பட்டு வருவதாக பினாங்கு கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரில் கீர் ஜொஹாரி தெரிவித்தார்.
இது போன்ற காணொளிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை விளைவிக்கக்கூடியதாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
பினாங்கு பாலிக் பூலாவ், ஜாலான் துன் சாடோனில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம் குறித்து பெரிதுப்படுத்தி, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெளியிடப்பட்ட காணொளிகளை அவர் சுட்டிக் காட்டினார்.








