Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பயணக்கட்டுப்பாடுகளை பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளவும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பயணக்கட்டுப்பாடுகளை பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளவும்

கோலாலம்பூர், செப்டம்பர் 03-

வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் மலேசியர்கள், வரி செலுத்துபவர்களாக இருப்பினும், தங்களின் பயணத்திற்கு முன்னதாக, தங்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை பரிசோதித்துப்பார்த்துக்கொள்ளும்படி வருமான வரி வாரியம் அறிவுறுத்தியள்ளது.

வருமான வரியை செலுத்தாமல், நிலுவையில் வைத்துள்ள மலேசியர்கள், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படுகின்றனர்.. இந்த தடையை மலேசிய குடிநுழைவுத்துறையின் ஒத்துழைப்புடன் வருமான வரி வாரியம் மேற்கொண்டு வருவதாக அதன் அதிகாரி
அஜாருதீன் முகமது அலி தெரிவித்தார்.

பயண ஏற்பாடு செய்யப்பட்டு, விமான நிலையத்திற்கு சென்றப்பின்னர், தங்களுக்கான பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவு சோதனையில் தெரிய வரும் போது அவர்கள் கடைசி நேர மன அழுத்ததிற்கு ஆளாகுவதை தவிர்க்க தங்களுக்கான பயணக்கட்டுப்பாடு குறித்து முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும் என்று அஜாருதீன் முகமது அலி குறிப்பிட்டார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →