Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சிறைச் செல்வதற்கு தயாராக இருக்கிறேன்
தற்போதைய செய்திகள்

சிறைச் செல்வதற்கு தயாராக இருக்கிறேன்

Share:

தம் மீது கொண்டு வரக்கூடிய நீதிமன்ற வழக்குகளில் தாம் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டால் அபராதம் செலுத்துவதை விட சிறைச்சாலைக்கு செல்ல தாம் தயாராக இருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று அறிவித்துள்ளார்.

தாம் சிறைக்கு செல்வது மூலம் தாம் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை துனாஸ் இஸ்லாம் போன்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கும், பாஸ் கட்சியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொடக்க கல்வித் திட்டங்களுக்கும் நன்கொடையாக வழங்க தாம் விரும்புவதாக ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

அபராதம் செலுத்துவதை விட அந்தப் பணம் தர்ம காரியங்களுக் பயன்பட வேண்டும் என்பதே தமது அவாவாகும் என்று ஹாடி அவாங் தெரிவித்தார்.

Related News