Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நான் பிரதீப் குமார் மாபெரும் இசை நிகழ்ச்சி
தற்போதைய செய்திகள்

நான் பிரதீப் குமார் மாபெரும் இசை நிகழ்ச்சி

Share:

தனது காந்த குரலால் இளையோர்களை தனவசம் ஈர்க்கும் பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமாருடன் இணைந்து Aakaar அறவாரியம் மீண்டும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஜுன் 29 ஆம் தேதி Bukit Jalil, Axiata Arena அரங்கில் நடத்தவிருக்கிறது.

காதல் உணர்வை மென்மையாகவும், நுட்பமாகவும் தனது பாடல்களில் வெளிப்படுத்தி, மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான பிரதீப் குமார் பங்கேற்கும் நான் பிரதீப் குமார் என்ற தலைப்பிலான இந்த இசை நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

இதனை கிட்டத்தட்ட பத்தாயிரம் ரசிகர்கள் கண்டு களிப்பார்கள் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் குமாரும், அவரின் குழுவினரும் பிரபல Datuk Mus and Friends Symphony இசைக்குழுவினரின் ஆற்றல் வாய்ந்த 24 .இசைக்கலைஞர்கள் மற்றும் சுங்கை பட்டாணியிலிருந்து KTB Parai என்ற குழுவினருடன் நான் பிரதீப் குமார் இசை நிகழ்ச்சியை படைக்கவிருக்கின்றனர்.

தவிர மிக பழமை வாய்ந்த கலை வடிவமான Wayang Kulit- நிகழ்வும் இந்த இசை கலைவிழாவில் சேர்த்துக்கொள்ளப்படவிருக்கிறது.

தமிழ்திரையுலகின் பிரபல நாட்டுப்புற பாடகரான அந்தோணி தாசனும் கலந்து கொண்டு நிகழ்விற்கு மெருகூட்டவிருக்கிறார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச இசை கலைஞர்கள் 46 பேர் பங்கேற்கும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி, Aakaar அறவாரியத்தின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாகும்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்