Aug 7, 2026
Thisaigal NewsYouTube
Senai மேம்பாலம் அருகே சாலைத் தகராறு: அரிவாளுடன் மிரட்டிய இருவர் கைது
தற்போதைய செய்திகள்

Senai மேம்பாலம் அருகே சாலைத் தகராறு: அரிவாளுடன் மிரட்டிய இருவர் கைது

Share:

கூலாய், ஆகஸ்ட்.03-

ஜோகூர் மாநிலம், Senai பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவரை அரிவாளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Tan Seng Lee கூறுகையில், 26 மற்றும் 30 வயதுடைய இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Iskandar Puteri, Forest City பகுதியில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவத்தில் மொத்தம் நான்கு பேர் தொடர்புடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை Senai அனைத்துலக விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் மேம்பாலம் அருகே இச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 30 செண்டிமீட்டர் நீளமுடைய அரிவாளை பறிமுதல் செய்துள்ள போலீசார், குற்றவியல் சட்டம் பிரிவு 506, 427 மற்றும் 279-இன் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி