ஜார்ஜ்டவுன், ஜனவரி.02-
பினாங்கில் நடைபெறவுள்ள அரச மலேசியக் காவற்படையின் Penang 2nd Bridge Polis Diraja Malaysia (PDRM) Solidarity Fun Ride 2026ஐ ஒட்டி, நாளை சனிக்கிழமை, மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை பல்வேறு முக்கிய சாலைகள் அதிரடியாக மூடப்பட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. குறிப்பாக, 2-வது பாலமான Sultan Abdul Halim Mu'adzam Shah பாலம் நாளை இரவு 8.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இரு திசைகளிலும் முழுமையாக மூடப்படும் என பினாங்கு மாநில காவற்படைத் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
Queensbay Mall முதல் Batu Maung வரையிலான முக்கியக் சந்திப்புகளும் Tun Dr Lim Chong Eu நெடுஞ்சாலையின் பல பகுதிகளும் கட்டம் கட்டமாக மூடப்படுவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் பயணம் செய்வோர் மாற்றுப் பாதையாக பினாங்கின் முதலாவது பாலத்தைப் பயன்படுத்துமாறும், போக்குவரத்து காவற்படையினரின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறும் பொதுமக்களுக்கு அஸிஸி இஸ்மாயில் அறிவுறுத்தியுள்ளார்.








