பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று தகவல், இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
எனினும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் அரிசி விநியோகம் மற்றும் அரிசி விலையேற்றம் தொடர்பாகவே அதிகமாக விவாதிக்கப்பட்டதாக ஒற்றுமை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளரான ஃபஹ்மி ஃபட்சில் விளக்கினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பியப் பின்னர் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்து வந்த வேளையில் அப்படி ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


