நீலாய், டிசம்பர்.22-
நெகிரி செம்பிலான், நீலாய், டேசா பால்மாவில் இன்று நிகழ்ந்த வெடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காரினால் இந்த வெடிச் சம்பவம் ஏற்பட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காலை 7.08 மணிக்கு கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் வெடிப்புப் பொருட்களும் மற்றும் ஆணிகளும் சிதறிக் கிடப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். அந்தக் காரைச் சோதனையிட்ட போது இந்த வெடி சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








