Oct 1, 2026
Thisaigal NewsYouTube

குற்றத்தை ஒப்புக் கொள்வோருக்கு 17 அம்ச புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குற்றத்தை ஒப்புக் கொள்வோருக்கு 17 அம்ச புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

கோலாலம்பூர், ஜனவரி.02-

மரண தண்டனையோ அல்லது நீண்ட கால சிறைத் தண்டனையோ விதிக்கப்படும் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய 17 அம்சக் கடுமையான வழிகாட்டுதல்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தன்னிச்சையாகவும், அதன் பின் விளைவுகளை முழுமையாக உணர்ந்தும் தான் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாரா என்பதை உறுதிச் செய்ய நீதிபதிகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி டத்தோ ஸைனி மஸ்லான் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ கஞ்சா கடத்திய குற்றத்தை ஒப்புக் கொண்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட 30 ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படித் தண்டனையும் உறுதிச் செய்த போது, இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் நீதிபதி டத்தோ ஸைனி எச்சரித்தார். இனி வரும் காலங்களில், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் புரியும் மொழியிலேயே குற்றச்சாட்டுகள் விளக்கப்பட வேண்டும் என்பதும், வழக்கின் ஆதாரங்களை அவர் அடையாளம் காண வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் சட்டத்துறையில் இது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
37 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு: யுஐடிஎம் ஹோல்டிங்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு

37 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு: யுஐடிஎம் ஹோல்டிங்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு

தெருநாய்கள், பூனைகள் கட்டுப்பாட்டில் பேராக் மாநிலம் முன்னுதாரணமாகிறது

தெருநாய்கள், பூனைகள் கட்டுப்பாட்டில் பேராக் மாநிலம் முன்னுதாரணமாகிறது

லங்காவியில் போலி அகதிகள் அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகம் - 43 வெளிநாட்டவர்கள் கைது

லங்காவியில் போலி அகதிகள் அட்டைகளைப் பயன்படுத்தியதாக சந்தேகம் - 43 வெளிநாட்டவர்கள் கைது

கோலா பிலா மாணவர் மரணம்: சந்தேக நபரால் துன்புறுத்தப்பட்டதாக 5 மாணவர்கள் வாக்குமூலம்

கோலா பிலா மாணவர் மரணம்: சந்தேக நபரால் துன்புறுத்தப்பட்டதாக 5 மாணவர்கள் வாக்குமூலம்

நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க அறிவும் ஆற்றலும் கொண்ட இளைஞர்கள் தேவை: பிரதமர் அன்வார் வலியுறுத்து

நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க அறிவும் ஆற்றலும் கொண்ட இளைஞர்கள் தேவை: பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஜோகூர் பாருவில் மழை வெள்ளம்: 37 குழந்தைகள் உட்பட 44 பேர் மீட்பு

ஜோகூர் பாருவில் மழை வெள்ளம்: 37 குழந்தைகள் உட்பட 44 பேர் மீட்பு