Oct 31, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா காடேக் தொகுதியில் இந்திய வேட்பாளர்களின் பலப்பரீட்சை: பெர்சாத்து திடீர் பின்வாங்கல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா காடேக் தொகுதியில் இந்திய வேட்பாளர்களின் பலப்பரீட்சை: பெர்சாத்து திடீர் பின்வாங்கல்

மலாக்கா மாநிலத் தேர்தலில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக முன்னதாக அறிவித்திருந்த பெர்சாத்து கட்சி, தற்போது வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், அத்தொகுதியில் இரு இந்திய வேட்பாளர்களுடன் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

பாரிசான் நேஷனல் சார்பில் எஸ். நடராஜா, பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஜெகசீலன் கே, பெர்சாமா கட்சி சார்பில் பி. லவீன், புத்ரா கட்சி சார்பில் லைலா நோரிண்டா மவோன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை, காடேக் தொகுதியில் பெர்சாத்து சார்பில் ஸம்ரி அபு பாக்கார் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்திருந்தது. இருப்பினும், இறுதியில் அக்கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை.

மேலும், காடேக் தொகுதியில் மலாய் வாக்காளர்கள் 60 விழுக்காட்டினரும், சீன வாக்காளர்கள் 20 விழுக்காட்டினரும், இந்திய வாக்காளர்கள் 17 விழுக்காட்டினரும் உள்ளனர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து இத்தொகுதி பாரிசான் நேஷனல் வசம் இருந்து வந்தது. இருப்பினும், 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் இத்தொகுதியைக் கைப்பற்றியது.

பின்னர், 2021-ஆம் ஆண்டு, நவம்பரில் நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் மஇகாவின் விபி சண்முகம் மூலம் பாரிசான் நேஷனல் மீண்டும் இத்தொகுதியைக் கைப்பற்றியது.

ஆறு முனைப் போட்டியாக நடைபெற்ற அந்தத் தேர்தலில் சண்முகம், 559 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →