இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் மாயமான பயணிகள் கப்பலில் மலேசியர்கள் எவரும் பயணம் செய்தற்கான உறுதியான தகவல் எதுவும் இல்லை விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.
கப்பலில் இருந்த 243 பேரில் 103 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 140 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, கப்பலில் பயணம் செய்தவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெற, விஸ்மா புத்ரா, இந்தோனேசிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மேலும், இந்தோனேசியாவில் வசிக்கும் அல்லது அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டுள்ளது.








