கோலாலம்பூர், ஆகஸ்ட்.23-
அமைச்சரவை முடிவுகளில் வெளியாட்கள் தலையீடோ அல்லது இடையூறோ இல்லை என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளில் குறிப்பிட்ட நபர் தலையிடுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஃபாமி விளக்கினார்.
அமைச்சவையில் விவாதிக்கப்படும் அனைத்து விவகாரங்களும் ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் மிக ரகசியமானவையே. அவற்றை வெளியிடவோ, அம்பலப்படுத்தவோ முடியாது என்று டத்தோ ஃபாமி விளக்கினார்.








