ஈப்போ, ஆகஸ்ட்.21-
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள 16 வயது எம். ஜெயசீலனைக் கண்டுபிடிக்க போலீசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஜெயசீலனின் ஆகக் கடைசியான முகவரி ஈப்போ, ஶ்ரீ கெபாயாங் பிளாட்ஸ், ஜாலான் காஸாலி ஜாவி என்பதாகும்.
ஜெயசீலனைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள், 013-731 2477 என்ற எண்ணில் சார்ஜன் ரஃபிடா அப்துல் ரஷிட் அல்லது சுங்கை செனாம் போலீஸ் நிலையத்துடன் 05-548 1637 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.








