Oct 6, 2026
Thisaigal NewsYouTube

சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடட் கிங்டம் நாடுகளில் துன் மகாதீரின் சொத்துகள் ஆராயப்படுகின்றன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடட் கிங்டம் நாடுகளில் துன் மகாதீரின் சொத்துகள் ஆராயப்படுகின்றன

கோலாலம்பூர், செப்டம்பஎ.24-

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்குச் சொந்தமானவை என்று சந்தேகிக்கப்படும் சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடட் கிங்டம் ஆகிய நாடுகளில் உள்ள சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் ஆராயத் தொடங்கியுள்ளது.

துன் மகாதீரின் சொத்துகள் தொடர்பில் எஸ்பிஆர்எம் ஒரு நாட்டில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. மாறாக, பிற தொடர்புடைய நாடுகளின் தகவல்களையும் ஆராய்ந்து வருவதாக அதனை தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

மற்ற நாடுகளில் உள்ள சொத்துகளும் ஆராயப்படுகின்றன. குறிப்பாக சுவிட்சர்லாந்து போன்ற பிற நாடுகளிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

துன் மகாதீர் சொத்துகள் தொடர்பில் இங்கிலாந்தைத் தவிர வேறு எந்தெந்த நாடுகளில் எஸ்பிஆர்எம் ஆராய்ந்து வருகிறது என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அஸாம் பாக்கி மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

எனினும் துன் மகாதீர் சொத்துகள் தொடர்பில் அஸாம் பாக்கி மேல் விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →