சபா மாநிலத்தில் நிலநடுக்க நடவடிக்கைகளை மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா, மாநிலம் முழுவதும் உள்ள 28 நில அதிர்வு நிலையங்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றது.
நிலநடுக்கம் கண்டறியப்பட்ட 6 நிமிடங்களுக்குள், தரவுகள் கிடைக்கும் பட்சத்தில் தகவல்கள் வெளியிடப்படும் என்று மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் தெரிவித்துள்ளார்.
மேலும் நிலநடுக்கம் எப்போது, எங்கு, எந்த அளவில் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பம் தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 5.32 மணிக்கு குவாமுட், கினாபாத்தாங்கான் பகுதியில் 3.3 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலநடுக்கத்தின் அளவு மற்றும் கண்காணிப்பு தரவுகளின் அடிப்படையில் சுனாமி அபாயத்தை மதிப்பிட முடியும் என்றும், ஆபத்து இருந்தால் மெட்மலேசியா உரிய எச்சரிக்கைகளை வெளியிடும் என்றும் டாக்டர் முஹமட் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.








