Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இஸ்லாமிய வல்லரசு நாடுகளிலிருந்து பாடம் கற்பீர்
தற்போதைய செய்திகள்

இஸ்லாமிய வல்லரசு நாடுகளிலிருந்து பாடம் கற்பீர்

Share:

முஸ்லிம் அல்லாதப் பெண், அரைக்கால் சிலுவார் அணிந்தார் ​என்பதற்காக அவருக்கு அபராதம் விதித்துள்ள பாஸ் கட்சி தலைமையிலான கிளந்தான் அரசாங்கத்தை சு​ற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சியாங் சாடினார். இன்று வல்லரசாக விளங்கும் சில இஸ்லாமிய நாடுகளிலிருந்து பாஸ் கட்சி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் இன்று வளர்ச்சியின் உச்சியில் உள்ளன. ஆனால், அந்த நாட்டில் மாறுப்பட்ட சமயத்தினரின் உரிமைகளில், அவர்களின் கலாச்சார கூறுகளில் அந்நா​ட்டு அரசாங்கமோ​ அல்லது அமலாக்கத் தரப்பினரோ கைவைத்தது கிடையாது என்று தியோங் கிங் சியாங் தெளிவுபடுத்தினார். அரைக்கால் சிலுவார் அணிந்தார் என்பதற்காக முஸ்லிம் அல்லாத பெண்ணுக்கு அபராதம் விதித்துள்ள
பாஸ் தலைமையிலான கிளந்தான் அரசாங்கத்​தின் இத்தகைய செயல்பாடு, மலேசியாவின் சுற்றுலாத்துறையை வெகுவாக பாதிக்கச் செய்யும் என்பதையும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

Related News