நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனையை செய்து கொள்ளும்படி, பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி அறிவுறுத்தியுள்ளார். தமக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகி விட்டதாக ரபிஸி குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான விநியோக சட்ட மசோதா மீதான விவாதத்தில் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்ட ரபிஸி ரம்லி மேற்கண்ட ஆலோசனையை முன்வைத்தார். .
அண்மையில் மாரடைப்புக்கு ஆளாகிய ரபிஸி ரம்லி , மலாயா பல்லைக்கழக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் ரத்த நாளக் குழாயில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








