நீலாய், ஆகஸ்ட்.24-
சாலைப் போக்குவரத்து துறை ஜேபிஜே நடத்திய தலைக்கவசப் பரிமாற்றத் திட்டத்தில் அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது. பரிசோதனைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 3,000 தலைக்கவசங்களில் சுமார் 40 விழுக்காடு மலேசிய தரநிலை, தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனமான சிரிம் சான்றிதழ் இல்லாமல், போதிய பாதுகாப்பு அம்சங்கள் அற்றவையாக இருந்தது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. ஒரு விபத்து ஏற்படும் போது தலையைப் பாதுகாக்க இந்தத் தலைக்கவசங்கள் தகுதியற்றவை என்று நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்து துறை இயக்குநர் ஹானிஃப் யுசாப்ரா யுசோஃப் தெரிவித்தார்.
பாதுகாப்பு இல்லாத இந்தத் தலைக்கவசங்கள் அனைத்தும் அழிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








