Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மந்திரி பெசாராக அமிருடின் ஷாரின் பெயரை பிகேஆர் முன்மொழிவில்லை
தற்போதைய செய்திகள்

மந்திரி பெசாராக அமிருடின் ஷாரின் பெயரை பிகேஆர் முன்மொழிவில்லை

Share:

கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவிக்கு சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரியின் பெயரை பிகேஆர் கட்சி முன்மொழியவில்லை என்று அதன் முன்னாள் துணைத் தலைவரும், பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இன்று அம்பலப்படுத்தினார்.
“சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக பொறுப்பு வகித்து வந்துள்ளேன் என்ற முறையில் மாநிலத்தின் புதிய மந்திரி புசார் பதவிக்கு என்னுடைய மற்றும் சிலாங்கூர் மாநில அரசின் தேர்வு சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரியே என்று கூறி அவரின் பெயரை இஸ்தானாவிற்கு முன்மொழிந்தது நானே” என்று அஸ்மின் அலி தெரிவித்தார்.
இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் சட்டமன்றத் தேர்தல் மாநாட்டில் உரையாற்றுகையில் அஸ்மின் அலி, இதனை தெரிவித்தார்.
இன்று வேண்டுமானால் அமிருடின், தனது புதிய நட்பு வட்டாரத்துடன் இணைந்து இருக்கலாம். ஆனால், மந்திரி புசார் பதவிக்கு அவரின் பெயரை இஸ்தானாவிற்கு முன்மொழிந்தது தாமே என்பது வரலாறாகும் என்று அஸ்மின் அலி குறிப்பிட்டார். பெரும் திரளாக உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டிற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் சிறப்பு வருகை புரிந்தார்.

Related News