Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வரி தொடர்புடைய இரு ஏஜென்சிகளை ஒருங்கிணைக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

வரி தொடர்புடைய இரு ஏஜென்சிகளை ஒருங்கிணைக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-

நாட்டிற்கு வருவாயை ஈட்டித் தரும் அரசாங்கத்தின் முக்கிய அமலாக்க இலாகாக்களான அரச மலேசிய சுங்கத்துறையையும், வருமான வரி வாரியத்தையும் ஒரே இலாகாவாக ஒருங்கிணைக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ப தேசிய வரி விதிப்பு அமலாக்க ஏஜென்சிகளாக அரச மலேசிய சுங்கத்துறையையும், லெம்பாகா ஹாசில் டாலாம் நெகிரி எனப்படும் வருமான வரி வாரியத்தையும் நிர்வாக ரீதியாக மேம்படுத்த அரசாங்கம் உறுதிப் பூண்டுள்ளது. ஆனால், வரி விதிப்புக்குரிய இரண்டு ஏஜென்சிகளையும் ஒரே இலாகாவாக ஒருங்கிணைக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று நிதி அமைச்சருமான அன்வார் விளக்கினார்.

நாட்டில் வரி விதிப்பில் ஒரே மாதிரியான பங்களிப்பையும், செயல் திறனையும், கடமைகளையும் கொண்டுள்ள அவ்விரு அரசாங்க ஏஜென்சிகளும் வெவ்வேறு இலாகாக்களாகச் செயல்படுவதைக் காட்டிலும் ஒரே இலாகாவாக செயல்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் பாசீர் புத்தே எம்.பி. டத்தோ டாக்டர் நிக் ஸாவாவி சால்லே, மக்களவையில் முன் வைத்த பரிந்துரைக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News