கோலாலம்பூர், அக்டோபர்.03-
குற்றவியல் வழக்கு விசாரணை ஒன்றைச் சந்தடியின்றி மூடுவதற்கு 2,500 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக முதிர் நிலை போலீஸ் அதிகாரி ஒருவர் ஷா ஆலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
நூருல் ஷிமிர் இஸ்ஸாதி ஜாமில் என்ற அந்த போலீஸ் அதிகாரி கடந்த ஜுன் 16 ஆம் தேதி பூச்சோங்கில் உள்ள ஓர் உணவகத்தில் ஆடவர் ஒருவரிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த உயர் போலீஸ் அதிகாரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








