Sep 27, 2026
Thisaigal NewsYouTube
உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க சட்டமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் விருப்பம்
தற்போதைய செய்திகள்

உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க சட்டமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் விருப்பம்

Share:

ஈப்போ, ஏப்ரல்.11-

அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேரா மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வு குறித்தும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. டீசல் விலை உயர்வும் அது பொருளாதாரச் சங்கிலியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் இக்கூட்டத் தொடரில் முக்கியமாக வலியுறுத்தப்படும் என மஞ்சோய் சட்டமன்ற உறுப்பினர் ஹாஃபிஸ் சப்ரி தெரிவித்துள்ளார்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையுடன் தீர்வுகளைக் காண வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள் தங்களது பங்களிப்பை வழங்கும் என்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்த அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News