பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒருமைப்பாட்டு வாரத்தை பள்ளிகளில் நடத்தப்படுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மலேசிய கல்வி விவகாரங்களுக்கான பெற்றோர் நடவடிக்கைக்குழுத் தலைவர் நூர் அசிமா கேட்டுக்கொண்டார்.
மலேசிய பள்ளி வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நடத்துது இல்லை. ஆனால், பாலஸ்தீனர்களுக்கான ஒருமைப்பாட்டு நிகழ்வு என்று திடீரென்று மாணவர்கள் மத்தியில் மாதிரி துப்பாக்கிகளை தாங்கிய நிகழ்வுகளை நடத்துவது பள்ளி புறப்பாட நடவடிக்கைகளுக்கு முராணன செயலாகும் என்று நூர் அசிமா வாதிட்டார்.
இது போன்ற நிகழ்வுகளில் புத்தகங்களை தூக்க வேண்டிய மாணவ, மாணவிகள் மாதிரி துப்பாக்கிகளை தாங்கி கொண்டு நிற்கும் காட்சியை கொண்ட புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்க்கும் போது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








