நாட்டில் இந்தியர்களுக்காக புதிய அரசியல் கட்சி தேவையில்லை என்று சுங்கை பூலோ பிகேஆர் எம்.பி. டத்தோ ரா. ரமணன் தெரிவித்துள்ளார். தற்போதைய மலேசிய அரசியல் நிலவடிமைப்பில் இந்தியர்களுக்காக புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்குவது அவசியமில்லாததாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் புதிய அரசியல் கட்சிகள் தொடங்கப்படுவதற்கான ஆருடங்கள் மத்தியில், தாம் சார்ந்துள்ள பிகேஆர் கட்சிக்கு தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடன் தீவிர கவனம் செலுத்தி வரப் போவதாக டத்தோ ரமணன் உறுதி தெரிவித்தார். தம்முடைய அரசியல் வாழ்வு பிகேஆர் கட்சியுடன்தான் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.








