Mar 17, 2026
Thisaigal NewsYouTube
தங்காக்கில் விபத்து, இருவர் பலி
தற்போதைய செய்திகள்

தங்காக்கில் விபத்து, இருவர் பலி

Share:

ஜோகூர், தங்காக், ஜாலான் முவார் -செகாமாட் சாலையின் 36 ஆவது கிலோ மீட்டரில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் ​உ​யிரிழந்ததுடன் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியள​வில் நிகழ்​ந்ததாக தங்காக் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்ரிதென்டன் ரொஸ்லான் முஹமாட் தாலிப் தெரிவித்தார்.

Mitsubishi Grandis ரக MPV வாகனம் சிகமாட்டிலிருந்து தங்காக் டோல் சாவடியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் வேககட்டுப்பாட்டை இழந்த நிலையில், தஙகாக்கை நோக்கி வந்து கொண்டிருந்த Suzuki Vitara ரக வாகனத்துடன் எதிரும் புதிருமாக மோதியதாக நம்பப்படுகிறது.

இதில் Suzuki Vitara ரக காரில் பயணித்த ஓட்டுநரும், பயணியும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.

Mitsubishi Grandis ரக கார் ஓட்டுநர் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி தங்காக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொஸ்லான் முஹமாட் தாலிப்ன்குறிப்பிட்டார்.

Related News