கூலாய், ஆகஸ்ட்.24-
அவசர காலங்களில், பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகள், நேரடியாக மக்களின் கைப்பேசிக்கு புஷ் நோடிவிகேஷன் வழியாக அனுப்பப்படும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் உருவாக்கி வருகிறது. இதன் மூலம், தாமதங்கள் இன்றி மிக வேகமாகவும் துல்லியமாகவும் குறிப்பிட்ட இடத்திலுள்ள மக்களுக்கு எச்சரிக்கையை அனுப்ப முடியும் எனக் கூறினார் தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங்.
இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட, அமைச்சு பரிந்துரைத்துள்ளது.








