Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

Share:

பத்துமலைத் திருத்தலத்தில் விண்ணுயர்ந்து நிற்கும் 140 அடி உயர முருகப்பெருமானின் திருவுருவச் சிலைக்கு அருகில் புதிதாக நிரமாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம், அடுத்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி வரையில் வெகுவிமரிசையாக நடைபெறவிருக்கிறது.

இந்த மகா கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் வரும் நவம்பர் 15 ஆம் தேதி புதன்கிழமை முதல் தொடங்கவிருப்பதாக கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா விவரிக்கிறார்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு, கும்பாபிஷேகத்தை தரிசித்து, ஸ்ரீ துர்க்கையம்மன் அருளை பெறுமாறு டான்ஸ்ரீ டத்தோ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News