Jul 19, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் மரம் முறிந்து விழுந்து விபத்து: காரில் பயணித்தவர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் மரம் முறிந்து விழுந்து விபத்து: காரில் பயணித்தவர் உயிரிழப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை.19-

கோலாலம்பூர் ஜாலான் துன் ரஸாக் சாலையில், Dua Residensi குடியிருப்பின் முன் பகுதியில், சிங்கப்பூர் தூதரகத்திற்கு அருகே, நேற்று இரவு சுமார் 10.20 மணியளவில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அவ்வழியே காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.

இது குறித்து டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சஸாகி அடாம் கூறுகையில், உயிரிழந்தவருக்கு இரு கைகளிலும் பலத்த காயங்களும், மார்புப் பகுதியில் உள் இரத்தக்கசிவும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

காயமடைந்த அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.00 மணியளவில் உயிரிழந்தார்.

இந்த விபத்தில், மேலும் ஒரு வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் அதில் பயணித்த 7 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அவர்கள் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related News