May 21, 2026
Thisaigal NewsYouTube
வியாபாரி முதலீட்டில் வெ.688,300 இழப்பு
தற்போதைய செய்திகள்

வியாபாரி முதலீட்டில் வெ.688,300 இழப்பு

Share:

திரெங்கானுவில் வியாபாரி ஒருவர் முதலீட்டில் அரை மில்லியன் வெள்ளிக்கு அதிகமான பணத்தை இழந்துள்ளார்.

மலேசிய பங்கு சந்தையில் முதலீடு செய்வது குறித்து முகநூல் அகப்பக்கத்தில் வெளியேற்றப்பட்ட விளம்பரத்திற்கு பாதிக்கப்பட்டவர் ஆர்வம் காட்டியிருப்பதாக திரெங்கானு காவல்துறை தலைவர் Datuk Mazli Mazlan தெரிவித்தார்.

பின், அந்நபருக்கு Accerx system இணையத்தளத்தின் வாயிலாக முதலீடு குறித்து தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வலைத்தளத்தின் மூலமாகவே 2 மில்லியன் லாபம் கிடைப்பதற்கு முன்பணமாக குறிப்பிடப்பட்ட தொகையை செலுத்த கட்டளையிடப்பட்டதை தொடர்ந்து / பாதிக்கப்பட்டவரும் 12 வெவ்வெறு வங்கியில் அப்பணத்தை அனுப்பியுள்ளார்.

பின் பாதிக்கப்பட்டவர் இணைக்கப்பட்ட வலைத்தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதை அறிந்து போலீசில் புகார் அளித்ததாக Mazli Mazlan விவரித்தார்.

Related News