Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மெட்ரிக்குலோன் கல்விக்கான விண்ணப்பங்கள் திறக்கபடுகின்றன
தற்போதைய செய்திகள்

மெட்ரிக்குலோன் கல்விக்கான விண்ணப்பங்கள் திறக்கபடுகின்றன

Share:

2023 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் அமர்ந்துள்ள மாணவர்களுக்கான 2024/2025 கல்வி ஆண்டுக்கான கல்வி அமைச்சின் மெட்ரிக்குலோஷன் கல்வித் திட்டத்திற்கான முதல் கட்ட விண்ணப்பங்கள், நாளை டிசம்பர் 15 ஆம் தேதி திறக்கப்படுகின்றன.

மார்ச் 31 ஆம் தேதி வரையில் திறக்கப்பட்டுள்ள இந்த விண்ணப்பங்களில் மெட்ரிக்குலோஷன் கல்வியை பெறவிரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

மெட்ரிக்குலோஷன் கல்விக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள், 2023 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News