Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கஞ்சாவைக் கடலில் கொட்டி விட்டு தாய்லாந்துக்குத் தப்பி ஓட்டம்
தற்போதைய செய்திகள்

கஞ்சாவைக் கடலில் கொட்டி விட்டு தாய்லாந்துக்குத் தப்பி ஓட்டம்

Share:

கெடா, தஞ்சோங் கெமருங் கடல் பகுதியில் வீசப்பட்ட 3 கிலோ எடை கொண்ட கஞ்சா இலைகளை கெடா, பெர்லிஸ் கடல்சார் மலேசியா கைப்பற்றியது.

9 ஆயிரம் வெள்ளிக்கும் மேலான மதிப்பு கொண்ட 3 கஞ்சா இலை பொட்டலங்கள் அண்டை நாட்டிலிருந்து கடத்தி வர முயற்சிக்கப்பட்டதாக மாநில மாரித்திம் இயக்குநர் கடல்சார் முதல் அட்மிரல், ரோம்லி முஸ்தபா கூறினார்.

சந்தேகிக்கும் படியான நிலையில் தாய்லாந்து கடல் பகுதியில் இருந்து ஒரு படகு இலங்காவி கடல் எல்லைக்குள் நுழைந்ததை மலேசிய கடல்சார் கண்காணிப்பு அமைப்பு வாயிலகத் தெரிய வந்தது.

அந்தத் தகவல் ரோந்துப் படகுகளுக்கு அனுப்பப்பட்டது.
கடல்சார் மலேசியாவின் ரோந்துப் படகுகள் வருவதை உணர்ந்த பிறகு தமது படகில் இருந்த கஞ்சா பொட்டலங்களைக் கடலில் வீசி விட்டு அந்த சந்தேக நபர் மீண்டும் தாய்லாந்து எல்லைக்குத் தப்பி ஓடிவிட்டதாக ரோம்லி முஸ்தபா இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

இவ்வாறான குற்றங்களைக் கையாள கெடா, பெர்லிஸ் கடற்படை சில திட்டங்களை வகுத்துள்ளது. குற்றங்கள் அதிக நாக்க வாய்ப்பிருக்கும் பகுதிகள் தமது தரப்பு எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ரோம்லி முஸ்தபா கூறினார்.

Related News