Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: டாயிம் மகள் அசனிடா விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

சொத்து விவரங்களை மறைத்த வழக்கு: டாயிம் மகள் அசனிடா விசாரணை கோரினார்

Share:

முன்னாள் நிதியமைச்சர் மறைந்த துன் டயிம் ஜைனுதீனின்-னின் மகள் அஸ்னிடா, சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டார்.

இருப்பினும், தாம் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தெரிவித்து, இவ்வழக்கில் விசாரணை கோரியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக, அஸ்னிடா மீது MACC சட்டம் பிரிவு 36(2)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நிபந்தனைகளை அவர் பின்பற்றவில்லை என்பது அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

மேலும், அமிராஸ் எஸ்டிஎன் பிஎச்டி, அரிடா ஃபார்ம்ஸ் எஸ்டிஎன் பிஎச்டி, காங்குங் கேட்டரிங் எஸ்டிஎன் பிஎச்டி, ட்ரான்ஸ்கிரேட் எஸ்டிஎன் பிஎச்டி மற்றும் கஜா3 ஃபுட்ஸ் எஸ்டிஎன் பிஎச்டி ஆகிய ஐந்து நிறுவனங்களில் தனது பங்குகளை அறிவிக்கத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பவர் 13-ஆம் தேதி, புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் இக்குற்றத்தை அவர் புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அஸ்னிடா அப்துல் டயிம்க்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 1 லட்சம் ரிங்கிட் வரையில் அபராதமும் விதிக்கப்படலாம்.

Related News