Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தனிப்பட்ட ஆதாயமின்றி சபாவின் குரலை மத்திய அரசுக்குக் கொண்டு செல்வதே என் இலக்கு! – பிரதமர் அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

தனிப்பட்ட ஆதாயமின்றி சபாவின் குரலை மத்திய அரசுக்குக் கொண்டு செல்வதே என் இலக்கு! – பிரதமர் அன்வார் திட்டவட்டம்

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.09-

தான் தொடர்ந்து சபா மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்வது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்ல, மாறாகச் சபாவின் மக்களின் குரலை மத்திய அரசு நேரடியாகக் கேட்கவே என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பரபரப்பாக வலியுறுத்தியுள்ளார். தனது மூன்று ஆண்டு கால ஆட்சியில், எந்தவொரு தனிப்பட்ட ஆதாயத்தையும் எண்ணாமல், சபாவின் உண்மையான தேவைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவதற்காகவே அதிக முறை இங்கு வந்துள்ள பிரதமர் தாம் என்று அவர் பெருமையுடன் கூறினார். தலைமைத்துவத்தில் நேர்மையையும் உளத்தூய்மையையும் குறிப்பிட்டுப் பேசிய அவர், "எனக்கு ஒரு மனைவி போதும், அஜிஸா என் இதயத்தில் இருக்கிறார்" என்று தனது துணைவியாரை நகைச்சுவையாகக் குறிப்பிட்டுத் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும், பிரதமர் என்ற முறையில் தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உணர்ச்சி அடிப்படையில் இல்லாமல், நாட்டின் நீதியையும் அனைத்து மக்களின் தேவைகளின் அடிப்படையிலுமே அமையும் என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார். தான் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பிரதமராக சபாவில் உள்ள வறியவர்களுக்கும், மோசமான சாலைகள், பழுதடைந்த பள்ளிகள் ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளித்து உதவுவதே தனது கடமை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். சபா மாநில மக்களின் மேம்பாட்டை உறுதி செய்வதே தமது நோக்கம் என்று கூறி, இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாடு நீதி சார்ந்தது என்று அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related News