Nov 21, 2026
Thisaigal NewsYouTube

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

மலேசியாவின் எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில் தங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் அர்ப்பணித்து வரும் அனைத்துக் கல்வியாளர்களுக்கும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது இனிய 2026 ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"ஆசிரியர்கள் வெறும் வகுப்பறைகளில் பாடங்களை மட்டும் போதிப்பவர்கள் அல்லர்; மாறாக, அவர்கள் மாணவர்களின் நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் செதுக்கும் உன்னதச் சிற்பிகளாகவும், நல்வழிகாட்டும் ஒளியாகவும் திகழ்கிறார்கள். சிறந்த ஆசிரியரே நாட்டின் இதயம் என்ற இந்த ஆண்டின் கருப்பொருள் அவர்களின் உன்னதப் பங்களிப்பைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது" என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், நவீன கல்விச் சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், எவ்வித சுயநலமுமின்றி முழுமையான அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் ஆசிரியர்களின் தியாகத்தை ஒட்டுமொத்த மலேசிய மக்களும் என்றும் நெஞ்சில் ஏற்றிப் போற்றுவார்கள் என்று டத்தோஸ்ரீ ரமணன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நெகிரி செம்பிலானில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் - அதனைப் பிடிக்க உடனடி நடவடிக்கை

நெகிரி செம்பிலானில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் - அதனைப் பிடிக்க உடனடி நடவடிக்கை

சீனாவுடனான வர்த்தக உறவின் எதிரொலி: மலேசிய நிறுவனங்கள் அனைத்துலக விநியோகச் சங்கிலியில்  இணைய வாய்ப்பு

சீனாவுடனான வர்த்தக உறவின் எதிரொலி: மலேசிய நிறுவனங்கள் அனைத்துலக விநியோகச் சங்கிலியில் இணைய வாய்ப்பு

இந்திய சமூகத்தினருக்கான தொழில்முனைவோர் வாய்ப்புகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் ரமணன் உறுதி

இந்திய சமூகத்தினருக்கான தொழில்முனைவோர் வாய்ப்புகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் ரமணன் உறுதி

பினாங்கில் அழியும் நிலையில் பாபா நியோன்யா பாரம்பரியம் - முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை

பினாங்கில் அழியும் நிலையில் பாபா நியோன்யா பாரம்பரியம் - முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை

கோலா கங்சாரில் 15 வயது மாணவர் மரணம்: முழுமையான விசாரணை நடத்த சிபிஎஸ்எம் வலியுறுத்தல்

கோலா கங்சாரில் 15 வயது மாணவர் மரணம்: முழுமையான விசாரணை நடத்த சிபிஎஸ்எம் வலியுறுத்தல்

புக்கிட் தாகாரில் விபத்து: வடிகால் நீர் சுழலில் சிக்கி இரு தொழிலாளர்கள் பலி

புக்கிட் தாகாரில் விபத்து: வடிகால் நீர் சுழலில் சிக்கி இரு தொழிலாளர்கள் பலி