Sep 25, 2026
Thisaigal NewsYouTube
2025 எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள்: வரலாற்று சாதனை!
தற்போதைய செய்திகள்

2025 எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள்: வரலாற்று சாதனை!

Share:

2025-ஆம் ஆண்டிற்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகளில் தேசிய ஒட்டுமொத்த சராசரி புள்ளி 2.88 ஆகப் பதிவாகி, இத்தேர்வின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த சாதனையைப் படைத்துள்ளது.

மலேசிய தேர்வுக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது அமின் பின் முகமது தஃப் இந்தத் தகவலை இன்று நடைபெற்ற தேர்வு முடிவுகள் ஆய்வறிக்கை வெளியீட்டின்போது தெரிவித்தார். 2024-ஆம் ஆண்டில் 2.85 ஆக இருந்த சராசரி புள்ளியுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய முன்னேற்றம் என்றும், 2013-ஆம் ஆண்டின் 2.57 என்ற சராசரியோடு ஒப்பிடும்போது மாணவர்களின் தேர்ச்சி 12.06% அதாவது 0.31 புள்ளிகள் அதிகரித்துள்ளது என்றும் டத்தோ டாக்டர் முகமது அமின் குறிப்பிட்டார்.

இந்தத் தேர்வில் 1,336 மாணவர்கள் 3.5% 4.00 என்ற முழுமையான சராசரி புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர், இது கடந்த ஆண்டின் 1,266 மாணவர்களுடன் ஒப்பிடுகையில் கூடுதலாகும். மேலும், 60 மாணவர்கள் 5A-க்களையும், 1,285 மாணவர்கள் 4A-க்களையும் பெற்று கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளனர். 2025 எஸ்டிபிஎம் தேர்வின் மூன்று பருவத் தேர்வுகளிலும் மொத்தம் 38,144 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News