Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்: கல்வி அமைச்சு
தற்போதைய செய்திகள்

பள்ளிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்: கல்வி அமைச்சு

Share:

கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் தற்போது அமலில் உள்ள பாதுகாப்பான பள்ளி மேலாண்மை வழிகாட்டுதல்களை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் பள்ளிகளில் நிகழ்ந்த விபத்துகள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சு, பள்ளி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை இது தெளிவாக காட்டுவதாக இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கல்வி நிறுவன பாதுகாப்பு சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இறுதிக்கட்டத்தில் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வாகனங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக தேசிய தொழிற்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனமான நியோஷ் உட்பட நிபுணர்களின் கருத்துகளும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்று ஜோகூரில் 8 வயது மாணவி பள்ளியின் நுழைவாயிலில் வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கல்வி அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம், பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் முன்பாக 4 வயது மாணவி வேன் மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு