கோலாலம்பூர், டிசம்பர்.22-
மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, வரும் டிசம்பர் 25 முதல் 29 ஆம் தேதி வரை தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்களில் கனத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கிளந்தான், திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறுகளுக்கு அருகிலும், கடற்கரையோரப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








