கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-
சுங்கை பூலோ, டேசா கோல்பில்ஸ் பகுதியில் கைதிகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் பாரோல் கண்காணிப்பில் இருந்த 39 வயதான எம்.தேவன் என்ற கைதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் முகமட் ஹஃபிஸ் முகமட் நோர் கூறுகையில், பாரோல் அதிகாரிகளும் போலீசாரும் நடத்திய தேடுதல் வேட்டையில் அக்கைதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருத்துவமனைகளிலும், காவல் நிலையங்களிலும் அவர் குறித்த தகவல் எதுவும் இல்லை என்றார்.
தேவனின் குடும்பத்தினரும் அவர் வீடு திரும்பவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் யாரேனும் தகவல் அறிந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு முகமட் ஹஃபிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.








