சைபர்ஜெயா, நவம்பர்.06-
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முதுகுவலியினால் அவதியுற்று வந்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து இன்று பணிக்குத் திரும்பினார்.
சைபர்ஜெயாவில் IC Desiign Park 2 எனும் மலேசிய மென்பொருள் அறிமுக நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த டத்தோ ஶ்ரீ அன்வார், முதுகுவலிலிருந்து தற்போது மீண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
முதுகுவலியினால் அவதியுற்று வந்த டத்தோ ஶ்ரீ அன்வார், கடந்த ஞாயிற்றுக்கிழமை பகாங் மாநிலத்தில் கலந்து கொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.








