கோலாலம்பூர், டிசம்பர்.24-
முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை அறிக்கை ஒன்றைத் திறந்துள்ளது.
நாடு, கோவிட் 19- நோய் தொற்றலை எதிர்நோக்குவதற்கு முன்னதாக அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த அந்த அமைச்சர், விசாரணைக்கு அழைக்கும் நோக்கில் இந்த அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அமைச்சர் லஞ்ச ஊழல் தொடர்பில் இதற்கு முன்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.
ஓர் அமைச்சுக்குப் பொறுப்பேற்று இருந்த காலக் கட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான விலை உயர்ந்த ஒரு நிலத்தை மேம்பாட்டாளர் நிறுவனத்திற்கு பெயர் மாற்றம் செய்ததாக அந்த அமைச்சர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.








