Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நேர்மையாக பொறுப்புகளை நிறைவேற்றுவேன்
தற்போதைய செய்திகள்

நேர்மையாக பொறுப்புகளை நிறைவேற்றுவேன்

Share:

ஜூலை 20-

நாட்டின் 17 ஆவது மாமன்னராக அரியணை அமர்ந்த மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நேர்மையாகவும், நியாயமாகவும், சமத்துவமான முறையில் அனைத்து மக்கள் நலனை முழுமையாக கருத்தில் கொண்டு, நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.

நாட்டின் நலனையும், இறையாண்மையையும் பாதுகாப்பது தமது தலையாய கடமையாகும். தம் மீது நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்து, நாட்டின் தலைமைப்பொறுப்பை ஏற்பதற்கு வாய்ப்பு வழங்கிய மலாய் ஆட்சியாளர்களுக்கு முதலில் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது உரையில் குறிப்பிட்டார்.

தமது ஆட்சிக்காலத்தில் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கவும், நாட்டை மேலும் முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச்செல்லவும், ஒரு வளமான மற்றும் செழிப்பான நாடாக மலேசியாவை உருவாக்குவதற்கு தொடர்ந்து பாடுபடப் போவதாக தமது சத்தியப் பிரமான உரையில் சுல்தான் இப்ராஹிம் உறுதிமொழி தெரிவித்தார்.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு